Recent Posts

Search This Blog

IMF ஐ வரவேற்போரை கடலில் தூக்கியெறிய வேண்டும்.. நாட்டின் இந்த நிலைமைக்கும் ஐ.எம்.எப்பே காரணம்.

Monday, 15 August 2022


நாட்டின் நெருக்கடி நிலைமைகளுக்கு
சர்வதேச நாணய நிதியமே காரணம்
என தெரிவிக்கும் சுயாதீன பாராளுமன்ற
உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார,


சர்வதேச நாணய
நிதியத்தை
வரவேற்போரை
கடலில்
தூக்கியெறிய
வேண்டும் எனவும்
தெரிவித்தார்.

அரசாங்கத்தில் உள்ள பலரும் அதேபோல்
எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலரும் சர்வதேச நாணய
நிதியத்திடம் நிதி உதவிகளைப் பெற வேண்டும் என
கூறுகிறார்கள். உண்மையில் இவர்கள் எவருக்கும்
சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றி தெரியாது
எனவும் தெரிவித்தார்.


16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திடம்
இலங்கை உதவிகளைப் பெற்றுள்ளது.


1978ஆம் ஆண்டு முதல் இலங்கையில் சர்வதேச
நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் படியே
செயற்படுகிறது. நாடு முகங்கொடுத்துள்ள
நெருக்கடிக்கும் இந்த நிதியமே காரணம்.
யுக்ரைன் யுத்தத்துக்கும் இதுவே காரணம் எனவும் தெரிவித்தார்.


ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலரும்
ஐ.எம்.எப் காரர்களாகியுள்ளனர்.


இலங்கை
ரூபாயின் வீழ்ச்சிக்கும், அரச நிறுவனங்கள் பல
தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டமைக்கும்
ஐ.எம்.எப்பே காரணம் எனவும் தெரிவித்தார்.



No comments:

Post a Comment