Recent Posts

Search This Blog

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை கண்டறிந்தாலே புதிய ஜனாதிபதியை ஏற்றுக்கொள்வோம் - கர்தினால் மல்கம் ரஞ்சித்

Sunday, 14 August 2022


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து புதிய விசாரணைகள் இடம்பெறவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் உயிர்த்தஞாயிறு தாக்குதலில் மறைந்துள்ள உண்மைகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலே புதிய ஜனாதிபதியை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை கண்டறிவதற்கான நடவடிக்கைகளில் புதிய அரசாங்கம் ஈடுபடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை கண்டறிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலே புதிய ஜனாதிபதியை நாங்கள் ஏற்றுக்கொள்வோம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் இந்த தாக்குதலின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த உண்மையை கண்டறிவதற்காக தற்போதைய ஜனாதிபதி முயலவேண்டும் எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஜஹ்ரான் ஹாசிமை கைதுசெய்வதற்கு முயன்ற பொலிஸ் உத்தியோகத்தரை தடுத்தவர்களை தண்டிக்கவேண்டும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment