
இலங்கையில் பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபட 10 நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் விருப்பம் (EOI) வெளியிட்டுள்ளதாக, மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, மலேசியா, நோர்வே, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள், இலங்கையில் பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபட தங்களது விருப்பத்தை தெரிவிப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள குழு, குறித்த முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, குறித்த முன்மொழிவுக்கான கோரிக்கைகளை வழங்கும் என்பதுடன் 6 வாரங்களில் இச்செயன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment