
பெல்ஜியத்தில் அதிகரித்திருக்கும் வாழ்க்கைச் செலவினத்தை எதிர்த்து மாபெரும் வேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சுமார் 80,000 ஊழியர்கள் தலைநகர் பிரசல்ஸில் அணிவகுத்தனர்.
ஊழியர்களுக்குக் கூடுதல் மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும் மேம்பட்ட வேலைச்சூழல் அமைக்கப்பட வேண்டும் என்றும் சிலர் ஆர்ப்பரித்தனர்.
போராட்டங்களால் நகரத்தின் போக்குவரத்து, பாதுகாப்புச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நகரிலிருந்து புறப்படும் அனைத்து விமானச் சேவைகளையும் பிரசல்ஸ் விமான நிலையம் ரத்து செய்தது.
பெல்ஜியத்தில் கடந்த மே மாதம் பணவீக்கம் 8.9 வீதமாக உயர்ந்தது. இது 1982 ஆம் ஆண்டு தொடக்கம் பதிவான உச்ச அளவாக இருந்தது.
குறிப்பாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால் தானிய விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதோடு வலுசக்திக்கான செலவும் அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment