


டீசல் கிடைக்காத காரணத்தினால் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சேவை நாளையுடன் நிறுத்தப்படும் என மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கத்தின் செயலாளரான அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் கிட்டத்தட்ட 50% மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ்கள் இயங்குவதை நிறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பஸ் நடத்துனர்கள் டீசலைப் பெற்றுக் கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதேவேளை, பஸ்களில் எரிபொருளை நிரப்புவதற்காக வரிசையில் பயணிகளுடன் காத்திருக்க வேண்டியுள்ளதாக சங்கத்தின் தலைவரான சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினை இல்லாமல் தனியார் பஸ்கள் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment