Recent Posts

Search This Blog

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினருக்கு நாம் வழங்கிய விருந்துபசாரத்தை படமெடுத்தவர்கள், செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபட வேண்டும் ; துறைமுக ராஜாங்க அமைச்சர்

Thursday, 11 January 2024


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட அமைச்சர்கள், அரச தரப்பின் எம்.பி.க்கள் உள்ளிட்டவர்கள் துறைமுகத்தை பார்வையிட வந்தபோது தேநீர் கொடுத்தது தவறா?

எனக்கேள்வி எழுப்பிய துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, அவ்வாறு தேநீர் கொடுத்ததை திருட்டுத்தனமாக புகைப்படம் எடுத்தவர்களை உடனடியாக கைது செய்வதுடன் பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிரான கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட அரச தரப்பினர் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்த போது செங்கம்பளம் விரித்து அவர்கள் வரவேற்றப்பட்டார்கள்.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரச தரப்பினர் கப்பலில் உல்லாச விருந்தில் ஈடுபட்டுள்ளார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் பொய் குற்றச்சாட்டை முன்வைத்தார்.


கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் தெளிவு படுத்துமாறு அரச தரப்பின் உறுப்பினர்கள் பலமுறை வலியுறுத்தினார்கள்.

துறைமுக விடயதானத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் நான் அவர்களை துறைமுகத்தை பார்வையிடுவதற்கு அழைத்து சென்றேன்.


வீட்டுக்கு வந்தவர்களுக்கு தேநீர் கொடுப்பதில் தவறென்ன உள்ளது? .

அன்று இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்துக்கு துறைமுக அதிகார சபையின் நிதி செலவழிக்கப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட அரச எம்.பி.க்கள் கலந்து கொண்ட விருந்துபசாரத்தை திருட்டுத்தனமாக படமெடுத்து அதனை ஊடகங்களுக்கு வழங்கியவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

அத்துடன் பொய்யான செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபட வேண்டும்” என தெரிவித்தார்.


No comments:

Post a Comment