Recent Posts

Search This Blog

5 கிராம் கஞ்சா வைத்திருந்தவருக்கு 27,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

Thursday, 11 January 2024


 கிளிநொச்சி பகுதியில் 5 கிராம் மற்றும் 6 மில்லி கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கு 27,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சி பகுதியில் ஐந்து மில்லி கிராம் கஞ்சா உடமையில் வைத்திருந்த இரண்டு பேரைக் கைது செய்த கிளிநொச்சி பொலிஸார் அவர்களுக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தனித்தனியாகப் புதன்கிழமை (10) ஆஜர்படுத்தியபோது தலா பத்தாயிரம் ரூபாய் படி இருவருக்கும் இருபதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.


இதேபோன்று ஆறு மில்லி கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரை  நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது ஏழாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment