(அஷ்ரப் ஏ சமத்)
பாக்கிஸ்தான் உயர் ஸ்தாணிகர் மேஜர்
ஜெனரல் (ஓய்வு) உமர் பாருக் புல்கி அவர்கள் உயர்ஸ்தாணிகராக இரண்டரை வருடங்கள் இலங்கையில் சேவையைப் பூர்த்தி செய்து அடுத்த வாரம் அலரது சொந்த நாட்டுக்கு செல்லவுள்ளார் அவருக்கு பிரியாவிடை யும் இராப்போசனம் நிகழ்வொன்றினை சுற்றுலா வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.எம். ஜவ்பர் அவர்களினால் கொழும்பு சினமன்ட கிரான் ஹோட்டலில் பிரியாவிடை வைபமொன்று ஏற்பாட்டில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய ரவுப் ஹக்கீம்...
பாக்கிஸ்தானையும் அந் நாட்டின் முன்னாள் பிரதமரையும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் வாழ்நாளில் என்றும் மறக்க மாட்டார்கள்.
கடந்த கொவிட் தொற்றுக் காலத்தில் உலக சுகாதார ஸதாபனம் கொவிட் 19 தொற்று சுற்றரிக்கையும் மீறி இந்த நாட்டில் கொவிட் காலத்தில் சிலர் இனரீதியாகவே செயற்பட்டனர்.
இலங்கையில் கொவிட் பாதித்து இறக்கும் முஸ்லிம்களது ஜனாசாக்கலை பலவந்தாகவே எரித்தார்கள்.
இதனால் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் பெரிதும் அச்சத்தில் காணப்பட்டார்கள்.
இக் காலகட்டத்தில் தான் பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் இலங்கை வந்து இறங்கினார் அவர் அப் பிரச்சினையை எவ்வித ஆரவாரமுமின்றி அமைதியாக முன்னாள் ஜனாதிபதியுடன் பேசி கொவிட் 19 இறக்கும் இலங்கை முஸ்லிம்களது ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி பெற்றுத் தந்தார்கள்.
இதற்கு கைமாறாக பாக்கிஸ்தான் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் ஜக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக சில நாடுகளில் ஆதரவினைப் பெற்றுக் கொடுப்பதற்கு பாக்கிஸ்தான் முன்னெடுப்பினை எடுத்திருந்தது.
.
பாக்கிஸ்தான் உயர்ஸ்தாணிகர் பாருக் புல்கி அவர்கள் தமது பதவிக் காலத்தினை முடித்துக் கொன்று சென்றாலும் பாக்கிஸ்தானும் பொருளாதார சிக்கலில் அகப்பட்டாலும் .
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் ,கல்முனை போன்ற பல பிரதேசங்களுக்குச் உயர்ஸ்தாணிகர் சென்று அங்குள்ள மக்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்துள்ளமை நாம் நன்றி கூறப் கடமைப்பட்டுள்ளோம் என ரவுப் ஹக்கீம் அங்கு உரையாற்றினார்.
இந் நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அதிதியாகக் கலந்து கொண்டு
உயர்ஸ்தாணிகருக்கு நினைவுச் சின்னங்களும் மற்றும் பொன்னாடைகளையும் போற்றி ஏனைய அதிதிகளும் கௌரவித்தார்.
இந் நிகழ்வுக்கு இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக், சுற்றுலாத்துறை மற்றும் கானி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பி ஹெரத், சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் தலைவர் சாலக்க கஜபாகு ஏ.எம். மிஹ்லார் முஸ்லிம் கேன்ட், இலங்கைக்கான வதிவிடப் பிரநிதி. மற்றும் பாக்கிஸ்தான் உயர்ஸ்தாணிகர் ஆலயத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய உயர்ஸ்தாணிகர் எனது வாழ்நாளில் முதன் முறையாக பொத்துவில் அருகம்பை பகுதிக்கு ஜவ்பர் அவர்களின் அழைப்பின் பேரில் சென்று யானை சவாரி செய்வதற்கும் சர்ந்தரப்பம் கிடைத்தது.
கடந்த காலத்தில் இலங்கை சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி கண்டாலும் இந்த ஆண்டு அதனை மீளக் கட்டியெழுப்பிவிட்டார்கள்.
இநத் ஹோட்டலில் கூட வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் நிரம்பிக் காணப்படுகின்றனர், மாலைதீவு நாட்டில் கூட சுற்றுலாத்துறை முன்னேற்றம் கண்டாலும் அங்கு கடல் பீச் சூரிய கடல் நீச்சல் மட்டுமே செய்ய முடியும் ஆனால் இலங்கையில் கடல் பீச், மலையகம், குளிர் சூடு, இயற்கையான வளங்கள், விவசாயம், காடுகள் மிருகங்கள் மற்றும் பீச் போன்ற சுற்றுலாத்துறைக்கான சகல அம்சங்களும் இலங்கையில் அடங்கியிருக்கின்றன
.சுற்றுலாப் பிரயாணிகளுக்கு மிகவும் விருப்ப்மானதொரு நாடு இலங்கையாகும். இலங்கையின் இயற்கையையும் அன்பான மக்களையும் எனது பதவிக் காலத்தில் சகல பகுதிகளுக்கும் நான் விஜயம செய்து அவதானித்து அனுபவித்தாக தெரிவித்தார் அத்துடன் இந் பிரியாவிடை இராப்போசன விருந்திற்கு எனது நண்பர் ரவுப் ஹக்கீம் வருகின்றார் என்றதுமே நான் ஜவ்பரின் அழைப்பினை ஏற்றுக் கொண்டேன் என உயரஸ்தாணிகர் அங்கு உரையாற்றினார்










No comments:
Post a Comment