Recent Posts

Search This Blog

நாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட மின்தடைக்கு மின்னல் தாக்கியமையே காரணம் ; மின்சார சபை தெரிவிப்பு

Saturday, 9 December 2023
நாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட மின்தடைக்கு மின்னல் தாக்கியமையே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்பிற்கு மின்னல் தாக்கியமையினால், நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி நேற்று மாலை 5.15 அளவில் திடீர் மின் துண்டிப்பு ஏற்பட்டு, இரவு 11.30 அளவிலேயே மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியது.


இந்த சம்பவம் தொடர்பில் மின்சக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை என்பன தனித்தனியே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்


No comments:

Post a Comment