Recent Posts

Search This Blog

மனைவி, பிள்ளைகளை ஆயுத முனையில் பணயக் கைதிகளாகப் பிடித்து மிரட்டி, வர்த்தகர் ஒருவரின் வீட்டில் 1 கோடியே 50 இலட்சம் கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம்.

Sunday, 3 December 2023


கற்பிட்டி - நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவக்காடு, கொலனி பிரதேசத்தில் உள்ள மரக்கறி விற்பனையில் ஈடுபடும் பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டில் ஆயுத முனையில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நாவக் காடு - கொலனி பகுதியில் உள்ள குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு சனிக்கிழமை (2) அதிகாலை 2 மணியளவில் கைத்துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த இந்த ஆயுததாரிகள் முதலில் அங்கிருந்த தொழிலதிபரையும், அவரது மனைவி உட்பட குடும்பத்தினரை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர் எனக் கூறப்படுகிறது.


குறித்த வர்த்தகரின் மனைவி மற்றும் பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த ஆயுதக் குழுவினர், அவர்களை கொலை செய்யப் போவதாக மிரட்டியதுடன், வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை வலுக்கட்டாயமாக திறந்துள்ளனர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த சுமார் 70 பவுன் தங்க நகைகள் மற்றும் 30 இலட்சம் ரூபாய் பணம் என்பனவற்றை கொள்ளையடித்த ஆயுததாரிகள், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை மற்றும் கற்பிட்டி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர



No comments:

Post a Comment