Recent Posts

Search This Blog

இனிமேல் என்னை அழைக்கும் போது ‘கலாநிதி’ சுரேன் ராகவன் என்றே அழைக்க வேண்டும்.

Wednesday, 8 November 2023


என்னை உரையாற்ற அழைக்கும் போது ‘கலாநிதி’ என்ற எனது கல்வித்தகுதி பட்டத்தை கூறியே அழைக்க வேண்டும்.

இதனை நான் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்” என சபைக்கு தலைமைதாங்கிய எம்.பி.க்கு உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் அறிவுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நீதிமன்றம். நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்பின்போதே அவர் இவ்வாறு அறிவுறுத்தினார்.

இந்த விவாத்தில் முக்கிய மக்கள் சக்தி எம்.பி. யான ஹேசான் விதானகே உரையாற்றி பின்னர் சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த அரச தரப்பு எம்.பி.யான சமன் பிரிய ஹேரத், ‘அடுத்ததாக உரையாற்ற கௌரவ சுரேன் ராகவனை அழைக்கின்றேன்’’ என்றார்.


இதனையடுத்து, எழுந்த உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்,

“என்னை உரையாற்ற அழைக்கும் போது ‘கலாநிதி’ சுரேன் ராகவன் என்றே அழைக்க வேண்டும்.


இதனை இந்த சபையில் சபாபீடத்துக்கு தலைமை தாங்கும் பலருக்கும் பல தடவைகள் கூறியுள்ளேன்.


நான் பல்கலைக்கழகம் சென்று கஷ்டப்பட்டு படித்து பெற்ற பட்டம் கலாநிதி. எனவே எப்போது என்னை அழைத்தாலும் ‘கலாநிதி’ என்ற பட்டத்தை எனது பெயருடன் சேர்த்து பயன் படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.


No comments:

Post a Comment