Recent Posts

Search This Blog

மத்திய மாகாணத்தில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் 13ஆம் திகதி ( திங்கள்) விஷேட விடுமுறை

Wednesday, 8 November 2023


தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



வருகின்ற 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி கொண்டாடப்படுகின்றமையால் மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ்மொழி மூலமான சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மேனக ஹேரத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.



13ஆம் திகதி வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு, அந்த வாரத்தில் விடுமுறை தினத்தன்று பாடசாலையை நடத்துமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்


No comments:

Post a Comment