Recent Posts

Search This Blog

அல்ஹாஜ் எச்.எம்.ஹனிபா நஜீம் இன் ஐம்பது இலட்சம் ரூபா நிதி உதவியில், கொழும்பு வாழைத் தோட்ட ஜூம்ஆப் பள்ளிக்கு சோலார் மின்சக்தி கட்டமைப்பு வழங்கி வைப்பு.

Tuesday, 7 November 2023



Solar Energy System Installed to the Al Masjidun Najimi

.
அஷ்ரப் ஏ சமட்

*கொழும்பு 12, வாழைத் தோட்டம், அல் மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப் பள்ளிவாசலில் சூரிய மின் சக்தி கட்டமைப்பு ஆரம்பித்து வைப்பு*


நாட்டில் தற்போதைய நிலையில் மின்சாரத்திற்கான கட்டணம் அதிகரித்துள்ள நிலையில் அதனை ஈடு செய்யும் வகையில் சூரிய மின் சக்தி மூலம் மின்சாரத்தை பெறும் திடத்தின் கீழ் ஐந்து மாடிகளைக் கொண்ட கொழும்பு 12, வாழைத் தோட்டம், அல் மஸ்ஜிதுன் நஜ்மி ஜீம்ஆப் பள்ளிவாசலுக்கு டைஸ்டார் நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் எச்.எம்.ஹனிபா நஜீம் என்பவர் சுமார் ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியில் தனது சொந்தச் செலவில் இலவசமாக சூரிய மின் சக்தி கட்டமைப்பை பொருத்திக் கொடுத்துள்ளார்.

சுமார் மூவாயிரம் அலகுகள் மின்சாரத்தைப் பெறும் இந்த சூரிய மின் சக்தி கட்டமைப்பு மூலம் பள்ளிவாசலுக்கு மாதாந்தம் தேவைப்படும் சுமார் 1100 அலகுகள் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மாதாந்தம் சுமார் என்பதாயிரம் ரூபா மின்சாரச் செலவு குறைவடைவதுடன் ஏனைய அலகுகளை இலங்கை மின்சார சபைக்கு வழங்கி அதன் மூலம் மாதாந்தம் மேலும் சுமார் நாற்பதாயிரம் ரூபா வருமாணமும் கிடைக்கும் வகையில் இத்திட்டத்தை ஹனிபா நஜீம் ஹாஜியார் செய்து தந்துள்ளதாக அல் மஸ்ஜிதுந் நஜ்மி ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவரும் பிரதம தர்மகர்த்தாவுமான அல்ஹாஜ் முஹம்மது நிஸ்வான் தெரிவித்தார்.

இந்த உதவியை வழங்கிய ஹனிபா நஜீம் ஹாஜியார் ஊடாக நேற்று (03) வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து சூரிய மின் சக்தி கட்டமைப்பு உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அத்துடன் பள்ளிவாசலுக்கும் ஊர் மக்களுக்கும் செய்த இந்த சேவையைப் பாராட்டும் பொருட்டு பள்ளிவாசல் நிருவாகத்தினராலும் ஜமாத்தினராலும் நினைவுச் சின்னம் வழங்கி நஜீம் ஹாஜியார் கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது பள்ளிவாசலின் உப தலைவர் அல்ஹாஜ் அம்ஜதீன், பொருளாலர் யு.எல்.எம்.அஸ்லம், இணைச் செயலாளர்களில் ஒருவரான ஏ.எச். கரீம் ஆசிரியர் உட்பட நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களும் ஜமமாத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.

பள்ளிவாசலின் பொருளாளர் அல்ஹாஜ் யு.எல்.எம்.அஸ்லம் இத்திடத்திற்கு முன்நின்று அயராது முயற்சி செய்து இந்த மின் கட்டமைப்பை பொருத்துவதற்கு உதவியமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment