Recent Posts

Search This Blog

முன்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி திடீரென திரும்பியதால், பின்னால் சென்று கொண்டிருந்த பஸ் விபத்தில் சிக்கியது - 13 பேர் காயம்.

Tuesday, 7 November 2023


நாகொட – கல்அஸ்ஸ பகுதியில் இன்று (08) அதிகாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



குறித்த விபத்தில் காயமடைந்த 13 பேர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



மாபலாகம பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.



பஸ்ஸிற்கு முன்பாக ஒரே திசையில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி, திடீரென வலது பக்கம் திருப்பியதை அடுத்து, பஸ்ஸின் சாரதி விபத்தை தடுப்பதற்கு முயற்சித்துள்ளார்.



எனவே, பஸ் வீதியை விட்டு விலகி, மதிலொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


No comments:

Post a Comment