Recent Posts

Search This Blog

30 வயது மனைவியை சுத்தியலால் தலையில் அடித்து கொ*ன்ற 36 வயது கணவன் தானும் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம்.

Saturday, 4 November 2023
தனது மனைவியைக் கொலை செய்த நபர் ஒருவர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் அளுத்கம, பெனிபெந்திகொட பிரதேசத்தில் நேற்று (04) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


குடும்பத் தகராறு காரணமாக கணவர் தனது மனைவியை சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்த பின்னர் வீட்டுக்குள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


30 வயதான மனைவி மற்றும் 36 வயதான கணவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment