Recent Posts

Search This Blog

VIDEO இணைப்பு : கொழும்பு பிரதேச வீதி கடமையில் ஈடுபட்டிருந்த இளம் பொலிஸ் உத்தியோகத்தர் மீது Suv ரக வண்டி மோதியதில் பரிதாபமாக உயிரிழப்பு.

Friday, 6 October 2023


கொழும்பு குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில் நேற்று (05) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளானார்.

சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவராவார்.

விபத்து தொடர்பில் காரை ஓட்டி வந்த தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரியும் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

(செய்திப் பின்னணி - October 5, 2023 06:57 pm)

குருந்துவத்தை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நெலும்பொகுன பகுதியில் இருந்து சுதந்திர சதுக்கத்திற்கு செல்லும் வழியில் சி.சி.சி மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியின் மீதே Suv ரக கார் மோதியுள்ளது.

மேலும் வாகனத்தை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்.



No comments:

Post a Comment