Recent Posts

Search This Blog

இலங்கையில் இன்று இடம்பெற்ற மூன்று வெவ்வேறு பேருந்து விபத்துக்கள் - ஒருவர் பலி , பலர் காயம்

Thursday, 5 October 2023


 இலங்கையில் இன்று மூன்று வெவ்வேறு பேருந்து விபத்துக்கள் (வாகனத்துடன் வாகனம் மோதிய சம்பவங்கள் )  இடம்பெற்றுள்ளன. 

1 - குளியாபிட்டியவில் பாடசாலை பஸ் ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸுடன் மோதியதில் 15 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல, கரந்திப்பல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


2 -நிட்டம்புவவில் தனியார் பேருந்து ஒன்று கொள்கலன் ட்ரக் வண்டியுடன் மோதியதில் பயணிகள் காயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கஜூகம பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில், 22 பேர் காயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறையில் இருந்து பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 22 பேர் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


3 - நீர்கொழும்பில் தனியார் பேருந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதியதில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளார்.

மூன்று சம்பவங்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

- இதற்கப்பால் இன்று காலை கொள்ளுபிட்டிய பிரதேசத்தில் பஸ் மீது மரம் வீழ்ந்து 5 பேர் உயிரிழந்து பலர் காயமடைந்த துரதிஷ்ட சம்பவம் இடம்பெற்றதும் அறிந்ததே.



No comments:

Post a Comment