யாழ் கொழும்பு ரயிலில் நேற்றிரவு (11) மது போதையில் பயணித்த ஒருவர் மோதலில் ஈடுபட்டதன் காரணமாக பயணிகள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சத்தில் இருந்த மக்கள் ரயில்வே பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து, அவர்களின் தலையீட்டின் பின்னர் மோதலில் ஈடுபட்டவர் கிளிநொச்சி ரயில் நிலையத்தில் இறங்கி தப்பி ஓடியுள்ளார்.
அவர் அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்த போது அப்பகுதி இளைஞர்களால் மடக்கி பிடித்து நைய புடைக்கப்பட்டுள்ளார்.
இதனால் நீண்ட நேர தாமதத்தின் பின்னர் பயணிக்கும் நிலை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்



No comments:
Post a Comment