Recent Posts

Search This Blog

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு.

Saturday, 7 October 2023


இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.



மேலும் பிரதமர் மோடி இது குறித்து தெரிவிக்கையில்,



இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடினமான சூழலை எதிர்கொண்டிருக்க இஸ்ரேலுக்கு உறுதுணையாக நிற்போம் என தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,



'இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் போராளிகளின் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர்.



உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மேலும் வன்முறைகளை தவிர்த்து அமைதிக்கான வழியை தேடுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்.' என தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment