Recent Posts

Search This Blog

பல வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரத்தில் தளர்த்தப்படும் ; நிதி இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றில் தெரிவிப்பு

Wednesday, 4 October 2023


பல வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரத்தில் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (4) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


முந்நூற்று நான்கு HS குறியீடுகளைத் தவிர, மற்ற வாகனக் கட்டுப்பாடுகள் இவ்வாறு நீக்கப்படும் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அரசாங்கம் ஆரம்பத்தில் எடுத்த முடிவை மாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:


வரும் வாரத்தில், தனியார் வாகனங்கள் தொடர்பான முன்னூற்று நான்கு HS குறியீடுகள் தொடர்பான கட்டுப்பாடுகளைத் தவிர மற்ற கட்டுப்பாடுகளை தளர்த்துவோம் என்று நம்புகிறோம்.

தனிப்பட்ட பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு. 299 HS குறியீடுகள் மற்றும் அறுபத்தேழு வணிக வாகனங்கள் கட்டுப்பாடுகளை நீக்கப்படும் என்றும் பழைய முடிவு மாற்றப்பட்டது என்றும் தெரிவித்தார்.



No comments:

Post a Comment