Recent Posts

Search This Blog

ஒரு இடத்தில் 122 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்கள் மீட்பு - இன்னொரு இடத்தில் பாரிய கஞ்சா செய்கை சுற்றி வளைப்பு

Friday, 6 October 2023


பேலியகொட மிட்கோ களஞ்சியசாலையில் இருந்து 122 மில்லியன் ரூபாய் பெறுமதியான 16 கிலோகிராம் நிறையுடைய குஷ் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்கள் சுங்கத் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.

கனடாவில் இருந்து கொழும்பில் உள்ள முகவரி ஒன்றுக்கு அனுப்பப்பட்ட பொதியொன்றிலிருந்து குறித்த போதைப் பொருள் மீட்கப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

குறித்த போதைப் பொருள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, உடவலவ காவல்துறையினரால் பலஹருவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோத முறையில் கஞ்சா செய்கையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 12 ஆயிரத்துக்கும் அதிகமான கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் 55 மற்றும் 32 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment