லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் பொருட்களை குறித்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த விலை குறைப்பு இன்று (20) முதல் அமுலுக்கு வருகிறது.
1- ஒரு கிலோ சோயாமீட் 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 580 ரூபா ஒரு கிலோ
2 - உள்ளூர் உருளைக்கிழங்கு 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை ஒரு கிலோ 290 ரூபா
3 - ஒரு கிலோ நெத்தலி 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1,100 ரூபா
4- ஒரு கிலோ பூண்டு 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, புதிய விலை 620 ரூபா
5- ஒரு கிலோ வெங்காயம் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 195 ரூபா
6 - சிவப்பு பருப்பு 6 ரூபாய் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 299 ரூபா.


No comments:
Post a Comment