சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, இலங்கையில் ஒருவர் ஒரு மாதத்திற்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 15,978 ரூபாவைச் செலவிடுகிறார்.
ஜூலை 2023 மாதத்திற்கான மாதாந்திர வறுமைக் கோடு அட்டவணையை வெளிப்படுத்திய சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்ச செலவு 60,3912 ரூபாவாகும்.
கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர் அதிக மாதாந்த செலவினமாக 17,233 ரூபாவைச் செலவழிக்க வேண்டி உள்ளது.
மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் குறைந்தபட்ச செலவான 15,278 ரூபாவைச் செலவழிக்க வேண்டும் என மேலும் தெரிவிக்கபடுகிறது.



No comments:
Post a Comment