Recent Posts

Search This Blog

குற்றச்செயல் ஒன்றிற்கு தயாராகி கொண்டிருந்த வெலி சுதா இத்தாலி துப்பாக்கியுடன் கைது.

Friday, 22 September 2023


முல்லேரியாவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கியை வைத்திருந்த நிலையில், பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 'வெலி சுதா' என அழைக்கப்படும் பிரியந்த சிறிநந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் நிலைய கட்டளைத்தளபதி பிரதம பரிசோதகர் விஜயரத்னவிற்கு கிடைத்த தகவலின் பேரில் முல்லேரியா அங்கொட அம்பத்தலே சந்தியில் உள்ள வீடொன்றில் விசேட அதிரடிப் பிரிவு வியாழன் கிழமை இந்த சுற்றிவளைப்பு மேற்கொண்டது.

இந்தச் சோதனையின் போது BRUNI MOD 92mm ரக இத்தாலியத் தயாரிப்பான கைத்துப்பாக்கி மற்றும் ஒரு மெகசினை கைப்பற்றியது.

அங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய சந்தேகநபர், குற்றச்செயல் ஒன்றிற்கு தயாராகி வந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்தே சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபருடன் அரை தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் மகசீன் முல்லேரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது


No comments:

Post a Comment