
சஹ்ரானின் அடிப்படைவாத அமைப்பு எவரையும் அரசியல் ரீதியாக தலைவராக்க செயற்பட்ட அமைப்பு அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரனவக குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் சஹ்ரானின் அடிப்படைவாத அமைப்பு யாரையும் அரசியல் ரீதியாக தலைவராக்க செயற்பட்ட அமைப்பு அல்ல என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். சஹ்ரான் குழு தௌஹீத் ஜமாத்தில் இருந்து பிரிந்து சென்ற மதபோதையில் மூழ்கிய ஒரு பிரிவுவாகும்.
இந்த பிரிவினர்களே 1000 வருடங்களுக்கு மேலாக தங்களுடைய மத பிரிவினர்களிடையே வன்முறைகளில் ஈடுபட்டனர்.அவர்களை தடுக்க எமது அதிகாரிகள் செயற்படபில்லை.அதன் விளைவாக இந்த தாக்குதல் இடம்பெற்றது.
இந்த மத அடிப்படைவாத குழு இலங்கையில் மாத்திரம் செயற்படவில்லை.இந்த குழு இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள அடிப்படைவாத குழுக்களுடனும் தொடர்பில் இருந்து.கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தமிழ்நாடு கோயம்புத்தூரில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் தொடர்பிடையவர்கள் சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த குழுவினரே.மீண்டும் இந்த தீவிரவாத செயல் தலைதூக்கியுள்ளது.
அரசாங்கம் சில தௌஹீத் அமைப்புகளின் தடையினை நீக்கியுள்ளது. இதன் விளைவாக வெலிகமவில் ஒரு அசம்பாவிதம் இடம்பெற்றது. இதே மாதிரியான ஒரு சம்பவம் ஒரு தசாப்பத்திற்கு முன்னரும் இடம்பெற்றது.
இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுடன் நாம் விளையாடக் கூடாது அரசியல் என்பது வேறு நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது வேறு என்பதை நாம் மனதில் வைத்துக்கொண்டு செயற்படவேண்டும்.


No comments:
Post a Comment