Recent Posts

Search This Blog

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனக்கு அமைச்சுப் பதவியை தர பல தடவைகள் அழைப்பு விடுத்தார்.. ஆனால் நான் வேண்டாம்னு சொல்லி விட்டேன்.

Sunday, 10 September 2023


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு அமைச்சுப் பதவியை தருவதற்காக பல தடவைகள் அழைப்பு விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை ஏற்கத் தான் தயாராக இல்லை என பண்டுவஸ்நுவர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரம் தான் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகச் சிலர் கூறினாலும் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment