Recent Posts

Search This Blog

நேற்று உக்ரைன் தலைநகர் மீது ட்ரோன்கள் மூலம் சரமாரியாக தாக்குதல் நடத்திய ரஷ்யா - பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது - சிலர் உயிரிழப்பு.

Thursday, 21 September 2023


ரஷ்யா-உக்ரைன் போரில் சமீப காலமாக இரு நாடுகளும் மாறிமாறி டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.



அதன் ஒருபகுதியாக நேற்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்யா சரமாரியாக ட்ரோன் தாக்குதல் நடத்தியது.



இதில் அங்கு பல குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் சேதமடைந்தன.



மேலும் இந்த தாக்குதலில் உக்ரைனின் தெற்கே உள்ள கெர்சோன் நகரில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.



இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 18 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது


No comments:

Post a Comment