இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை, அங்கு ஒரு தரப்பினரால் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது.
பாரத் மட்டுமன்றி இந்துஸ்தான், பாரத் வர்ஷா உள்ளிட்ட பெயர்களும் இந்தியாவுக்கான மாற்றுப் பெயராக சில தரப்புகளால் அப்போது முன்வைக்கப்பட்டன.
சிந்து நதி பாயும் துணைக்கண்டத்தின் பெயர், அதனையொட்டி இந்தியாவானது வரலாறு.
நாடு பிரிந்த பின்னரும் அந்த பெயரே நிலைத்தது.
ஆனால், இந்தியா என்ற பெயரை இழந்ததாக பாகிஸ்தானுக்கு ஒரு ஆதங்கம் உண்டு எனவும் தெரிவிக்க படுகிறது.
காரணம், இந்தியா என்ற பெயருக்கு காரணமான சிந்து நதி தற்போது பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கிறது.
தற்போது இந்தியாவில் ஆளும் தரப்பினரால் இந்தியா என்ற பெயருக்கு எதிரான கோரிக்கை வலுத்து வருவதை அடுத்து,
பாகிஸ்தானில் ஒரு தரப்பினர் ’இந்தியா’ பெயரை பாகிஸ்தான் வரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்தியாவின் பெயரை பாரத் மாற்ற வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், நாடாளுமன்றத்தின் எதிர்வரும் கூட்டத்தொடரின் போதும், இந்த பெயர் மாற்றத்துக்கான மசோதா தாக்கலாகும் என்ற கணிப்பும் வெகுவாக பரப்பப்பட்டு வருகிறது.
முக்கியமாக, பாஜகவின் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ’இந்தியா’ என பெயர் சூட்டப்பட்டதை அடுத்து ஆளும் பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் மத்தியில் இந்தியா என்ற பெயர் மீது கசப்பு உருவாகி விட்டது.
இவற்றுக்கு அப்பால் நடைமுறையில், அரசு ஆவணங்கள் மற்றும் நடைமுறைகளில், இந்தியா என ஆங்கிலத்திலும், பாரத் சர்க்கார் என இந்தியிலும் குறிப்பிடப்பட்டு வருகின்றன.
அவற்றை ஒரே அடையாளமாக ’பாரத்’ என மாற்ற வேண்டியது அவசியம் எனவும் பா. ஜ க தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
இப்படி இந்தியா என்ற பெயரை இந்தியா துறக்குமாயின், அதனை வரிந்துகொள்ள பாகிஸ்தான் தயாராக வேண்டும் என பாகிஸ்தான் பத்திரிக்கைகள் அந்நாட்டு அரசை வலியுறுத்தி வருகின்றன.



No comments:
Post a Comment