ஷஹீன் அப்ரிடி எதிர்காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வழிநடத்த வேண்டும் என ஊடகம் ஒன்றில் சமீபத்தில் வெளியான செய்தியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, கடுமையாக மறுத்துள்ளார்.
அந்நாட்டு ஊடக செய்தி சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியின் போது, தவறான தகவல் பரப்பப்பட்டதாக அஃப்ரிடி தனது மறுப்பை வெளிப்படுத்தினார்.
"நான் எனது ட்விட்டரில் ஸ்க்ரோலிங் செய்து கொண்டிருந்தேன், அப்போது ஊடகம் ஒன்று எனது பெயரில் ஏதோ ஒன்றை வெளியிட்டுள்ளதை நான் பார்த்தேன், அதில் ஷாஹீன் அப்ரிடியால் பாபர் ஆசாமை விட பாகிஸ்தான் அணியை சிறப்பாக வழிநடத்த முடியும், லாகூர் கலாண்டர்ஸ் அவரது தலைமையில் பி.எஸ்.எல் கோப்பையை வென்றார். என நான் கூறியதாக செய்தி வெளியாகி இருந்தது.
சில அறிக்கைகள் ஊடகங்களால் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றன என்பது குறித்து முன்னாள் கேப்டன் தனது குழப்பத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.
"நான் எனது கருத்துக்களை சரியாக வெளிப்படுத்தினாலும், மீடியா ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. நான் எனது கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்கிறேன், ஆனால் அவர்கள் media அதை அவர்களின் சொந்த வழியில் விளக்குகிறார்கள். இருப்பினும் ஷஹீனை தலைமை பதவியில் இருந்து விலக்கி வைக்கும் ஒரே நபர் நான் தான்
ஷதாப் கானுக்குப் பதிலாக ஷாஹீன் அப்ரிடி ODI மற்றும் T20I அணியில் வைஸ் கேப்டனாகப் பொறுப்பேற்கலாம் என்று குறிப்பிட்ட அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் மூலம் வலியுறுத்துவது கவனிக்கத்தக்கது.
எவ்வாறாயினும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இந்த விவகாரம் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதால், இந்தக் கூற்றுக்கு ஆதாரமான ஆதாரங்கள் எதுவும் இல்லை.


No comments:
Post a Comment