Recent Posts

Search This Blog

Asia Cup இலங்கை Vs ஆப்கான் போட்டி நடக்க முன்பே பாங்களாதேஷ் அணி Super 4க்கு தெரிவானது எப்படி?

Sunday, 3 September 2023


✍️ By: Ziyad Aia

#NRR Net Run Rate எவ்வாறு கணிக்கப்படுகிறது?

Simple Equation:

கிரிக்கெட் போட்டித் தொடர்களில் அணிகளின் புள்ளிகள் சமமாக வருமிடத்து Net Run Rate (NRR) மூலம் அடுத்த சுற்றுக்கு அணிகள் தெரிவு செய்யப்படும்.

இம்முறை Asia Cup 2023இல் Group B இல் Net Run Rate இன் திருவிளையாடல் சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை, ஆப்கானிஸ்தான் போட்டி நடைபெற முன்பே Bangladesh Super 4க்கு தெரிவானதாக அறிவிக்கப்பட்டது எவ்வாறு?
Ziyad Aia

#NRR
ஒரு அணி பெற்ற மொத்த ஓட்டங்களை ஓவர்களால் பிரித்து வரும் பெறுமானதிலிருந்து எதிரணிக்கு விட்டுக்கொடுத்த ஓட்டங்களை ஒவர்களால் பிரித்து வரும் பெருமானத்தை கழிக்க வருவது NRR ஆகும்.

In Other words:
NRR = Overக்கு பெற்ற ஓட்டம் - Overக்கு விட்டுக் கொடுத்த ஓட்டம் 


(சராசரியாக ஒரு Overக்கு பெற்ற ஓட்டங்களில் இருந்து கொடுத்த ஓட்டங்களை கழிக்க வருவது NRR ஆகும்.)

கவனிக்க: NRR என்பது ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியாக பார்க்கப்படுவதில்லை. மொத்த போட்டிகளில் Overக்கு பெற்ற , விட்டுக் கொடுத்த ஓட்டங்கள் மொத்தமாக பார்க்கப்படும்.

Note: இங்கு 50 Over போட்டியில் 42 Over யிலேயே அணி ஆட்டமிளந்தால் (All Out) சந்தித்த Overs களாக 50யே கொள்ளப்படும். 42 அல்ல. பங்களாதேஷ் அணி இலங்கை அணியிடம் அடைந்த தோல்வி.

Sri Lanka Vs Afganistan இடையிலான அடுத்த போட்டியை எடுத்துக்கொள்வோம். 

முதலில் Afganistan 50 Over களில் 300.
பின்னர் Sri Lanka 230 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து தோல்வி அடைகிறது என வைத்துக் கொள்வோம்.

இப்போது இலங்கையின் Net Run Rate = Over க்கு பெற்ற சராசரி - கொடுத்த சராசரி.
SL பெற்ற சராசரி = (165 பங்காளிக்கு எதிராக+ 230 ஆப்கானிக்கு எதிராக)/ (39 பங்களிக்கு எதிரான Overகள்+ 50 ஆப்கானிக்கு எதிரான Overகள்) = 5.45

SL எதிரணிக்கு கொடுத்த சராசரி = (164+300)/50 + 50=  4.438

எனவே Sri Lankaவின்
NRR = 4.438 - 4.64 = -0.20
என்ற மறை பெறுமானத்தை பெறும். 

இதே நேரம் Afganistanஇன் 
பெற்ற சராசரி= 245 + 300 / 50 + 50 = 5.45

Afganistanஇன் விட்டுக் கொடுக்க சராசரி:
334 + 230 / 50+ 50 = 5.64
எனவே Afganistanஇன் புதிய NRR = 
5.45 - 5.64 = -0.19

(இங்கே AFG Vs SL போட்டியில் AFG = 300 ஓட்டங்களையும் SL = 230 ஓட்டங்களையும் பெற்றதாக அனுமானிக்கப்பட்டுள்ளது.)

இந்த அனுமானப்படி 
SL NRR = -0.20 
AFG NRR = -0.19
ஆக AFG NRR படி தெரிவாகலாம். அதே நேரம் Bangladeshஇன் NRR +0.373ஆக அப்படியே இருக்கும்.

இங்கே AFGஇன் NRR மறைப் பெறுமானத்தை பெறும்போதே SLஇன் NRR மறைப் பெறுமானத்தை தொடுவதால் AFGஆனது BANஇன் NRRஐ தாண்டும்போது SLஇன் NRR மறை பெறுமானத்தில் அதள பாதாளத்துக்கு செல்லும்.

இலங்கை அணி வெற்றி பெற்றால் Afganistan அணியின் NRR ஏற்கனவே உள்ள -1.78இலும் இன்னும் குறையும். அந்த நிலையில் தொடர்ந்தும் Bangladesh இரண்டாம் இடத்திலேயே இருக்கும்.

இதனாலேயே இவ்விரு அணிகளும் (SL Vs AFG) என்ன குஸ்தி கரணம் போட்டாலும் Bangladesh தெரிவு உறுதியாகிவிட்டது.

இக்குழப்பம் ஒன்றுடனொன்று இணைந்த வெறும் 3 அணிகள் NRRக்கு போட்டி இடுவதால் உண்டானது.

(இலங்கை 164 எனும் இலக்கை 39 Over வரை இழுத்ததன் பிரதிபலிப்பு என்றும் சொல்லலாம்.)

இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி 70 ஓட்டங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது ஒரு அனுமானம் மாத்திரமே.

ஒரு அணியின் துடுப்பாட்டத்தின் பின்னரே அடுத்த அணியை மட்டுப்படுத்த வேண்டிய ஓட்டங்களை/ எத்தனை ஓட்டங்களுக்குள் AFG வெற்றி பெறவேண்டும் என்பதை சரியாக கணிக்க முடியும்.

AFG 300 அடித்து SL 230க்கு கீழ் அடித்தால் (70 Runs வித்தியாசம் AFGக்கு போதுமானது.)
AFG 300+ ஆக ஆக வெற்றி பெற வேண்டிய ஓட்ட வித்தியாசமும் 70ஐ விட அதிகரிக்கும்.

AFGஇன் ஓட்டங்கள் 1st Battingஇல் குறைய குறைய வெற்றி பெறவேண்டிய ஓட்ட வித்தியாசம் குறையும்.
AFG 200 எனில் SLஐ 60 வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலே போதும்.

எப்படியும் இலங்கை அணி AFGஐ வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோல்வி அடைந்தாலும் SL NRRஐ தாண்டுவது AFGக்கு மிகக் கடினம்.
அதிலும் இங்கை அணிக்கு முதல் துடுப்பாட்டம் கிடைத்தால் AFGக்கு இன்னும் கடினமாகும்.

குறிப்புகள்:

கடைசி Over கடைசி பந்தில் வெற்றி or குறுகிய ஓட்ட வித்தியாசத்தில் பெறப்படும் வெற்றிகளில் NRR மிகக் குறைந்த அளவே மாற்றம் பெறும். 

அதேபோல் அதிக போட்டிகள் வரும்போது NRR இல் பெரிய மாற்றத்தை கொண்டுவர பாரிய வெற்றி தேவை. 
✍️ By: Ziyad Aia


No comments:

Post a Comment