Recent Posts

Search This Blog

நாட்டில் கசிப்பு உற்பத்தி 500 வீதத்தினால் அரிகரிப்பு !!

Saturday, 9 September 2023


இலங்கையில் சட்டவிரோத மதுபான  (சட்டவிரோத ஆல்கஹால்) உற்பத்தி 500% ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


சட்டப்பூர்வ மதுவின் நுகர்வு 50% அதிகரித்துள்ள நிலையில், சட்டவிரோத மதுபானத்தின் வளர்ச்சி 500% ஆக உயர்ந்து அது  கடுமையான சமூகப் பிரச்சினைகளை எழுப்பியுள்ளது.


இலங்கையில் தற்போது 4570 மதுபானக் கடைகள் 25 வகையான மதுபான உரிமங்களின் கீழ் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் 538 மதுபானங்கள் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு விற்கப்படும் ஒரு போத்தல் மதுபானத்திற்கு 75% வரி அறவிடப்படுவதுடன், போலி மது விற்பனையைத் தடுக்கும் வகையில் ஸ்டிக்கர் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஸ்டிக்கர்களிலும் போலியானவை அதிகரித்திள்ளதாக கூறப்படுகிறது, போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சுமார் ஒரு லட்சம் மதுபாட்டில்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளன. 43776 மதுபான போத்தல்கள் 180 மில்லி (டைம் போத்தல்கள்) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அண்மையில், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தீவுப் பகுதியில் மதுபானம் விற்பனை செய்வது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 


நாட்டில் பரவியுள்ள மதுபானசாலைகள் தொடர்பிலான தகவல்களை கருத்திற்கொண்டு நுவரெலியா மாவட்டத்தில் 6809 பேருக்கு ஒரு மதுபானசாலை வீதம் காணப்படுகின்றது. ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவிலான மக்கள் ஒரு மதுபானக் கடையில் 9,90,000 சேவையைப் பெறுகின்றனர்.



No comments:

Post a Comment