Recent Posts

Search This Blog

மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 300 பேர் வரை உயிரிழப்பு

Friday, 8 September 2023


மொரோக்கோ நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை சுமார் 300 பேர் வரை உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

பூமிக்கு அடியில் 8.36 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.


மொராக்கோ நாட்டில் இன்று அதிகாலை 3:14 மணி அளவிலேயே இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.


சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் அங்கிருந்த வீடுகளின் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மராகேச் என்ற பகுதியில் இருந்து 72 கிலோமீட்டர் தூரத்தை மையமாகக் கொண்டு 6.8 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.


இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment