Recent Posts

Search This Blog

காத்தான்குடி நகரில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் இலவசமாக தாகசாந்தி வழங்கப்பட்டது.

Saturday, 26 August 2023



(அஸ்ஹர்இப்றாஹிம் )

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நிலவும் வரட்சியான காலநிலையால் பொது மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களுக்கு நிவாரணம் தரும் வகையில் காத்தான்குடியைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்று தன்னார்வாக முன்வந்து மனிதாபிமான அடிப்படையில்  வழிப்போக்கர்கள்,  உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள், பாடசாலை மாணவர்கள்  மற்றும் வாடிக்கையாளர்கள் போன்றோருக்கு தாக சாந்தி வழங்கியமை அனைவரினதம் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்த தாக சாந்தி குளிர்பானத்தினை இன மத மொழி வேறுபாடின்றி அனைவரும் அருந்தி மகிழ்ந்தனர். 



No comments:

Post a Comment