Recent Posts

Search This Blog

இன்று இலங்கையில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தான் சுதந்திர தினம்.

Monday, 14 August 2023


 (அஷ்ரப் ஏ சமத்)

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் சுதந்திரத்தின் 76வது ஆண்டு விழாவை  இன்று 14ஆம் திகதி கொழும்பில் உள்ள உயர் ஸ்தாணிகர் ஆலயத்தில் கொண்டாடியது.


இலங்கையில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பாரூக் பர்கி பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றி இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அத்துடன்  பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் விசேட செய்திகள் வாசிக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை)

உமர் பாரூக் பர்கி 

 பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுபிணைப்பானது வரலாற்றில் ஆழமானது.முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை நோக்கியது பாக்கிஸ்தான் உயர் ஸ்தாணிகர் ஆலயம் இலங்கையில் பல்வேறு சமூக அபிவிருத்தி, விளையாட்டு, பாதுகாப்பு பயிற்சி மற்றும் கல்வி அபிவிருத்தித் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உதவி வருகின்றது பாக்கிஸ்தானுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த முஹம்மத் அலி ஜின்னாவினை நினைவு கூர்ந்து இன்றைய சுதந்திர தினத்தினை பாக்கிஸ்தானியர்கள் கொண்டாடுகின்றார்கள். இலங்கை பாக்கிஸ்தான் 

  இராஜதந்திர பாதுகாப்பு மற்றும் கலாச்சார  உறவுகளை தொடர்ந்து வளர்த்து வரும் அதே வேளையில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்கட்டமைப்பிற்குள் வர்த்தகம் மற்றும் இருதரப்பு முதலீட்டை மேம்படுத்துவதன் மூலம், இரு

நாடுகளுக்கு இடையே பொருளாதார இணைப்புகளை விரிவுபடுத்தவும் வழிகளை ஆராய்ந்து

வருகிறோம்; என்று குறிப்பிட்டார்.








No comments:

Post a Comment