Recent Posts

Search This Blog

பம்பலப்பிட்டியில் பயணிகளுடன் தலை கீழாக கவிழ்ந்த பஸ்.

Monday, 14 August 2023


 எம்.எம்.றம்ஸீன்)

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டூப்ளிகேஷன் வீதிக்கு அருகில் இன்று (14) அதிகாலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று தும்முல்லயிலிருந்து வந்த லொறியுடன் மோதி வீதியில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

விபத்தின் போது பஸ்ஸில் சுமார் 15 பயணிகள் இருந்தனர், இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின்விளக்கு இன்றி பஸ் இயங்கியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


விபத்தின் போது பேருந்து முற்றாக கவிழ்ந்து சேதமடைந்ததாகவும் லொறியின் முன் பக்கம் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.




No comments:

Post a Comment