Recent Posts

Search This Blog

பள்ளிவாசல் அறையை உடைத்து திருட்டு... CCTV யில் பதிவாகி உள்ள நபரை கண்டுபிடிக்க பொலிஸார் நடவடிக்கை.

Wednesday, 19 July 2023


 திருகோணமலை டைக் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் அறைகளை உடைத்து அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்ட சம்பவமொன்று கடந்த வியாழக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது.  


திருகோணமலை வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்கள் தங்கி இருந்த மூன்று அறைகளை உடைத்து அங்கிருந்த ஆடைகள், ஒரு தொகை பணம், தலைக்கவசங்கள் உட்பட பல பொருட்களை சிறுவன் ஒருவனுடன் சேர்ந்து நபரொருவர் திருடிச் செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி கமெராவில் பதிவாகியுள்ளது. 


இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், திருடர்களை கண்டுபிடிக்க பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment