Recent Posts

Search This Blog

உணவகம் ஒன்றில் தீ விபத்து.. முழுமையாக தீயில் எரிந்து நாசம்.

Wednesday, 19 July 2023


வவுனியா நகரில் கண்டி வீதியில் இரண்டாம் குறுக்குத்தெரு சந்திக்கு எதிரே இருந்த லக்சனா உணவகம் புதன்கிழமை இரவு 8.20 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.



குறித்த தீயை வவுனியா மாநகரசபை தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்த கடும் முயற்சி செய்த போதும் உணவகம் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.'



இருப்பினும் தொடர்ச்சியாக அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு தீப்பரவல் ஏற்படாத வகையில் கட்டுப்படுத்தப்பட்டது.



தீப்பரவலுக்கான காரணம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.



தீ விபத்துக்கான காரணம் குறித்து வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்


No comments:

Post a Comment