கல்முனை ஹுதா பள்ளிவாசல், தஃவா குழுவின் ஏற்பாட்டில் க.பொ.த.சா.தரம்
எழுதிய மாணவ, மாணவிகளுக்கான ஆன்மீக, உளவியல் கருத்தரங்கு-2023
(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை ஹுதா பள்ளிவாசல், தஃவா குழுவின் ஏற்பாட்டில் க.பொ.த.சா.தரம்
எழுதிய மாணவ, மாணவிகளுக்கான ஆன்மீக, உளவியல் கருத்தரங்கு-2023
மெளலவி சாபித் (ஷரயி, ரியாதி) தலைமையில் நேற்று (17) பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து பயன்பெற்றனர். உளவியல் ரீதியாக அஷ்-ஷெய்க் அப்துல் ஹமீட் (ஷரயி) அவர்களால் மாணவர்களுக்கு பல ஆலோசனைகள் வழிகாட்டப்பட்டது. அத்துடன் கலாநிதி அஷ்-ஷெய்க் ரிஷாட் (ரியாதி) அவர்களால் இளைஞர் யுவதிகளுக்கு தேவையான ஆன்மீக வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
கருத்தரங்கின் இறுதி நிகழ்வாக கேள்விகள் கேட்கப்பட்டு சரியான விடையளித்த மாணவ, மாணவிகளுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உலமாக்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், தஃவா குழு உறுப்பினர்கள், பிறை அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். நெளபீல் மற்றும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.



No comments:
Post a Comment