இங்கினியாகல பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவிகளும் மீகஹவத்த - அகுருமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீகஹவத்த பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலையொன்றில் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் O/L பரீட்சைக்கு தோற்றவுள்ள இரு மாணவிகளும் கடந்த 15ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு மாணவிகளும் காணாமல் போனமை தொடர்பில் இங்கினியாகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த இரண்டு மாணவிகளும் கொழும்புக்கு வந்து, மாணவி ஒருவருடன் தொடர்பில் இருந்த இளைஞனுடன் பேசி அவரைச் சந்தித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மீகஹவத்தை பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ. கே. விஜேதிலக்க மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்..


No comments:
Post a Comment