உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதில் இந்தியா - அவுஸ்திரேலியா மோதி வருகின்றன. இதில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ஓட்டங்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்தியா 296 ஓட்டங்களுக்கு ஓல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ஓட்டங்களுக்கு எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 444 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா நேற்று களமிறங்கியது.
இறுதியில் 4-ம் நாள் போட்டிநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.
விராட் கோலி 44 ஓட்டத்துடனும், ரஹானே 20 ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர்.
இன்று (5-ம் நாள்) போட்டி இறுதிநாள் என்ற நிலையில் இந்தியா வெற்றிபெற இன்னும் 280 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.
அதேவேளை அவுஸ்திரேலியா வெற்றிபெற இன்னும் 7 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இதனால் இன்றைய கடைசி நாள் போட்டியில் பரபரப்பாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 4 ம் நாள் போட்டிநேர முடிவுக்கு பின் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவிக்கையில், டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை ஆட்டம் செல்ல செல்ல ஆடுகளம் மெதுவாக இருக்கும். ஆனால், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்த மைதானம் தயார்படுத்தப்படவில்லை என நான் நினைக்கிறேன்.
இந்த மைதானம் முழுமையாக தயாராகவில்லை. நாட்கள் செல்ல செல்ல மைதானம் டெஸ்ட் போட்டிக்கு ஏற்றார்போல் மாறும். டெஸ்ட் போட்டியின் முடிவு 5-ம் நாளின் கடைசியில் முடிவு செய்யப்பட வேண்டும். இது தான் உண்மையான டெஸ்ட் போட்டி. கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ளோம். இரு அணியும் கடுமையாக போராடியுள்ளது.
நாங்கள் சிறப்பாக துடுப்பாட வேண்டும். இறுதிப்போட்டியில் நாங்கள் வெற்றிபெறுவோம் என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
இங்கிலாந்தில் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் நாங்கள் சிறப்பாக விளையாடியுள்ளோம். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிண்ணத்தை நாங்கள் இணைந்து வெல்லுவோம். நாம் சிறப்பாக துடுப்பெடுத்தாடினால் 280 ஓட்டங்கள் என்பது எட்டக்கூடியது தான்' என தெரிவித்துள்ளார.



No comments:
Post a Comment