Recent Posts

Search This Blog

விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு கைதான 7 பெண்களுக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிப்பு - தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக எச். ஐ. வி பரிசோதனை செய்யுமாறு சுகாதாரப் பிரிவினரால் கோரிக்கை

Saturday, 10 June 2023


வவுனியாவில் விபச்சாரத் தொழில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது என தொிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதியில் குறித்த 7 பெண்களும் விபச்சாரத் தொழில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எனவே, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் எச்.ஐ.வி தடுப்பு பிரிவுக்கு சென்று தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினரால் கோரப்பட்டுள்ளது.

-வவுனியா தீபன்-


No comments:

Post a Comment