Recent Posts

Search This Blog

வாத்துவ பிரதேச கடலில் 12 அடி நீளமுள்ள முதலை..

Wednesday, 7 June 2023


வாத்துவ கடற்கரை பகுதிக்கு அருகில் உள்ள கடலில் சுமார் 12 அடி நீளமுள்ள முதலை ஒன்று நேற்று பிற்பகல் சுற்றித்திரிந்துள்ளது.


இதனால் கடற்கரையை அண்மித்துள்ள மக்களும், மீனவ மக்களும் சற்று அச்சமடைந்துள்ளதாகவும், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து விலகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாத்துவ, மொல்லிகொட, தல்பிட்டிய மற்றும் பின்வத்த கடற்கரைகளுக்கு அருகில் முதலைகள் நடமாடுவதை கடற்கரைக்கு அருகில் உள்ளவர்கள் கண்டுள்ளனர்.

இது தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கடற்கரையில் பாதுகாப்பற்ற முறையில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும் வாத்துவ பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment