தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் F.H. ஷிப்லி அஹ்மட் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் கலாநிதிப் பட்டம் பெற்றிருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்!
கல்வி நிலையில் ஒரு சில அடைவுகள் தனி நபர்களுக்கு பெருமை சேர்க்கும்.
இன்னும் சில அடைவுகள் நம் சமூகத்துக்கு நன்மை பயக்கும். அதிலொரு அடைவுதான் நண்பர் சிரேஷ்ட விரிவுரையாளர் கவிஞர் ஷிப்லியுடையதும்.
பல்வேறு வேலைப்பளுக்களுக்கு மத்தியில் தான் கற்ற கல்வியைக் கொண்டு அவராலான அனைத்து உதவிகளையும் கல்வி மற்றும் தொழில் சார் வழிகாட்டல்களையும் எமது மாணவர்களுக்கு வழங்கிக் கொண்டிருப்பவர்.
அவரை முதன் முதலில் தனிப்பட்ட வகையில் சந்தித்த போதே இவர் நிச்சயம் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வருவார் என்று மனதில் நினைத்திருந்தேன். அவருக்காக பிரார்த்தனை செய்திருக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
இன்று ஒரு மைல்கல்லை எட்டியிருக்கிறார்.
அவரை விட எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
இன்ஷா அல்லாஹ், இதை விடவும் மேலான அடைவுகளை வல்ல ரஹ்மான் அவருக்கு வழங்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
மிகவும் நெருக்கடியான காலப் பகுதியில் பல சிரமங்களுக்கு மத்தியில் தனது கலாநிதிக் கற்கைகளை நிறைவு செய்திருக்கிறார் .
வாழ்த்துக்கள் ❤️.
- sajjath cassim -



No comments:
Post a Comment