Recent Posts

Search This Blog

ஜனாஸா அறிவித்தல் ; கண்டி தும்பர ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் பலகொல்ல அஷ்ஷேய்க் அப்துஷ் ஷகூர் (அல் ஹுமைதி) ஹஸ்ரத் காலமானார்.

Wednesday, 17 May 2023


ஜனாஸா அறிவித்தல்

السلام عليكم ورحمة الله وبركاته

கண்டி தும்பர ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் பலகொல்லையைச் சேர்ந்த அஷ்ஷேய்க் அப்துஷ் ஷகூர் (அல் ஹுமைதி) ஹஸ்ரத் அவர்கள் காலமானார்கள்.

மிகத் திறமையான ஒரு ஆலிம்
கல்வியிலும் திறமையானவர் தனது வைத்தியத்துறையிலும் மிக மிக திறமையானவர் சமூகப்பணிகளிலும் தைரியமாக துணிச்சலுடன் செயல்படக்கூடியவர் .

தான் செய்யும் விடயங்கள் மார்க்கத்திற்கு சரியானால் யாருடைய விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் வேலை செய்யும் சேவகன் .

திறமையான பலரிடம் சிறந்த பண்புகளை காண முடியாது ஆனால் மௌலவி அப்துஷ் ஷகூர் பணிவான அன்பான ஒரு சிறந்த மனிதர்.

சிறித்துக்கொண்டே அன்பாக வரவேற்கும் ஒருவர்.

தன்னுடன் இருந்த இளம் உலமாக்களையும் மூத்தவர்களையும் சிறப்பாக கண்ணியமாக அரவனைக்கும் பண்புள்ளவர்.

அல்லாஹ் அவருக்கு அன்பான மனைவி அன்பான குழந்தைகளை கொடுத்திருந்தான் உண்மையில் குழந்தைகள் ஸாலிஹானவர்கள்.

சிறந்த ஒரு ஆளுமை என்னுடைய நீண்ட நாள் நண்பர் அதிகமாக முன்னேற்றம் ஆரோக்கியம் சம்பந்தமான விடயங்களை புத்திமதியாக முன்வைப்பார்.

குழந்தைகளை மார்க்க கல்விக்காக ஈடுபடுத்தியிருக்கிறார் ஒரு ஆலிமாவாக பட்டம் பெற்றுவிட்டார் ஏனைய பிள்ளைகள் மத்ரஸாவிலும் பாடசாலையிலும் கல்வி கற்றுக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் குழந்தைகள் விடயமாக பல எதிர்ப்பார்ப்புகளை வைத்திருந்தார் அவற்றை நேரடியாக பார்க்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை உள்ளம் கணக்கிறது அவரின் பிரிவை தாங்க முடியாது என்றாலும் அல்லாஹ்வின் முடிவை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

திடீரென்று நோயில் விழுந்தார் அப்பொழுதும்கூட பொறுமையாக தைரியமாக இருந்தார் மௌத்தைப் பற்றி பயப்படவே இல்லை சின்னஞ்சிறு பிள்ளைகளை விட்டுவிட்டு போய் விட்டார் நெருக்கமாக பழகிய எம்மையும் நிரந்தரமாக விட்டு விட்டு போய் விட்டார் .

எல்லா உறவுகளும் அவர்களின் மறுமை வாழ்விற்கு துஆச் செய்து கொள்ளுங்கள் அன்னாரின் மனைவி பிள்ளைகள் குடும்பத்தினருக்காகவும் அதிகம் துஆச்செய்து கொள்ளுங்கள்.

إنا لله وإنا إليه راجعون
اللهم اغفر له وارحمه واسكنه فسيح جناتك و انزل السكينة والصبر على أهله وتقبل منه جميع خدماته الدعوية والعلمية والإجتماعية بقبول حسن واجعل اللهم الفردوس الأعلى مثواه وارض عنه.

M.J.M IRFAAN (RASHADI )
18/05/2023
ACJU KANDY DUMBARA BRANCH


No comments:

Post a Comment