Recent Posts

Search This Blog

அதீத வளர்ச்சியை நோக்கி இந்தியப் பொருளாதாரம் ; ஐ.நா அறிக்கை வெளியிட்டது.

Wednesday, 17 May 2023


உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் குறித்த அறிக்கை ஒன்றை ஐ.நா. வெளியிட்டுள்ளது.



தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் வளர்ச்சி மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 2023 ஆம் திகதி 5.8 சதவீதமாகவும், 2024 ஆம் ஆண்டில் 6.7 சதவீதமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



உள்நாட்டு தேவை மீட்சியடைந்து வருவது பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிக வட்டி விகிதம், வெளிப்புறத் தேவையில் காணப்படும் தொய்வு நிலை ஆகியவை தொடர்ந்து நடப்பாண்டுக்கான இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் முதலீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.



அதேசமயம், பணவீக்கம் 2023 ஆம் ஆண்டு 5.5 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதற்கு, உலகளவில் பொருட்களின் விலை மிதமான அளவில் காணப்படுவது முக்கிய காரணமாக இருக்கும். உலக பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டு 2.3 சதவீதம், 2024 ஆம் ஆண்டு 2.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது


No comments:

Post a Comment