Recent Posts

Search This Blog

விமல் ஒரு காலத்துல எப்பிடி இருந்த மனுஷன்.... சஷி வீரவங்சவிடம் கூறி கவலைப்பட்ட மகிந்த.

Saturday, 6 May 2023


வெசாக் தினத்தை முன்னிட்டு நேற்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச , தனது விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் தான நிகழ்வொன்றை நடத்தினார்.

அதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவங்சவும் கலந்துகொண்டமை அரசியல் வட்டாரங்களில் பரப்பாக பேசப்படுகிறது.



அண்மைக்காலமாக அரசியல் விமர்சனங்களை கடுமையாக முன்வைத்துவரும் விமல் வீரவங்ச ,இந்த நிகழ்விற்கு தனது துணைவியாரை அனுப்பியிருப்பதால் அரசியலில் புதிய திருப்பங்கள் ஏற்படுமா என்பது குறித்து கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.



விமலின் துணைவியாருடன் நேற்று சம்பாஷணையொன்றில் ஈடுபட்ட மஹிந்த , விமல் வீரவன்ச ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் இருந்தபோது அவருக்கிருந்த மக்கள் ஆதரவு தொடர்பிலும் இப்போதுள்ள மக்கள் ஆதரவு குறித்தும் விளக்கியுள்ளார்.



'' விமல் முன்னர் உரையாற்றும்போது மக்கள் கூட்டம் திரண்டிருக்கும். ஆனால் இப்போது கொஞ்சம் பேர் கூட்டமாக நின்று அவரது உரையை கேட்கின்றனர்.

அண்மைய மே தினக் கூட்டம் அப்படித்தானே இருந்தது. விமல் அப்படி இருக்க வேண்டிய ஆள் இல்லை. இதனை நான் கூறியதாக விமலிடம் சொல்லுங்கள்..''

என்று மஹிந்த ராஜபக்ச ,சசி வீரவங்சவிடம் தெரிவித்தாரென அறியமுடிந்தது.


No comments:

Post a Comment