பாடசாலை மாணவர்கள் தத்தம் சமய ஒழுக்க மாண்புகளையும் கலாசாரப் பண்பாடுகளையும் தமது வாழ்க்கையிலும் நடத்தையிலும் கடைப்பிடித்து நடப்பதோடு ஏனைய சமய கலாசார விழுமியங்களையும் அறிந்து கொண்டு சிறந்த கல்விப் பெறுபேறுகளை அடைய வேண்டும் என்று கல்வி அமைச்சின் அழகியல் மற்றும் சமய கலாசாரப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி நிசாந்த ஹென்துன் பத்திரன தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய நோன்புப் பெருநாள் கலாசார விழா குருநாகல் சியபம்பலகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலையின் மண்டபத்தில் அதிபர் எஸ். எம். ஹைதர் அலி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி அமைச்சின் அழகியல் மற்றும் சமய கலாசாரப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி நிசாந்த ஹென்துன் பத்திரன அவர்களும் கௌரவ அதிதியாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் என். டி நசுமுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கலாநிதி நிசாந்த ஹென்துன் பத்திரன இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்
இலங்கையின் முதல் தடவையாக கல்வி அமைச்சினால் நடத்தப்படும் முஸ்லிம்களுடைய நோன்புப் பெருநாள் தேசிய விழாவில் கலந்து கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன்.
கல்வி அமைச்சின் மூலம் சமய விவகாரங்கள் தொடர்பில் சகல பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டல்களை மேற்கொள்ளுகின்ற செயற்திட்டத்தின் கீழ் தேசிய நோன்புப் பெருநாள் பண்டிகை விழாவை முதன் முiறாயக இன்று இப்பாடசாலையில் நடத்துகின்றோம்.
சமீபத்தில் தேசிய சிங்கள தமிழ் புத்தாண்டு விழா நடத்தினோம். சிங்கள மொழிப் பாடலில் ரமழானின் சிறப்பை மிக அழகாக நாங்கள் கேட்டு இருக்கின்றோம்.
எமது நாட்டின் பிரபல்யமான பாடகர் மொஹிதீன் பேக் சிங்கள மொழி மூலத்திலும் சிங்கள சமய பக்தி கீதங்களையும் பாடியுள்ளார்.
நாங்கள் எல்லோரும் பொதுவாக ஒன்றுபட்டவர்கள். சமயங்கள் நல்ல கருத்துக்களையே போதிக்கின்றன. இது சமய கலாசார வேலைத் திட்டம் ஆகும். இங்கு சிங்கள கிறிஸ்தவ சமயத் தலைவர்கள் ரழமானின் சிறப்பையும் அதனுடைய மகிமையும் குறித்து சிறப்பாக உரையாற்றினார்கள்.
பாடசாலை மாணவர்கள் தத்தமது கலை கலாசாரப் பண்பாட்டு அம்சங்களை மேடையேறி வெளிக்கொணர்வதற்கும் பிற சமூக சமுயத்தவர்கள் அதைப் பற்றி அறிந்து தெளிவாக கொள்வதற்கும் நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டம் இது. இந்தியாவில் கலாநிதி பட்டப் படிப்பை மேற்கொள்ளுகின்ற போது பல்லின இன மக்களுடைய கலாசாரப் பண்பாட்டு அம்சங்களை நான் அறிந்து கொண்டோம். வெசாக் பொசன் போன்றவையும் அவ்வாறு அமைந்துள்ளன.
நோன்பு காலத்தில் நாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்மாதரியான அம்சங்களை நாங்கள் விளங்கிக் கொண்டோம். நாம் எல்லோரும் விளங்கிக் கொள்ள கூடிய விடயங்களும் நோக்குகங்களும் எல்லாம் ஒன்றதாகத் தான் இருக்கிறது. அழகியல் கலைத் துறையிலும் பாடசாலைப் பிள்ளைகள் நாட்டம் கொண்டு தங்களுடைய உயர் கல்வி நடவடிக்கை மேற்கொள்வது மென்மேலும் நல்ல சிறப்பாக அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் தேசிய நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை இலங்கை வரலாற்றில் சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலையில் முதன் முறையாக கொண்டாடப்படுவது என்பது பெருமைக்குரிய விடயமாகும்..
இந்த ஏற்பாட்டினைச் செய்வதற்கு ஆலோசனை வழங்கிய கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களுட்கு எங்களது முதல் நன்றிகளைக் கூறிக் கொள்கின்றேன் என்று கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் என். டி நசுமுதீன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்
இப்பாடசாலை வடமேல் மாகாணத்தில் இருக்கின்ற மிகவும் சிறந்த ஒரு முன்னணிப் பாடசாலையாகும்.
நீங்கள் இந்தப் பாடசாலையின் கற்கின்ற நீங்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சிறந்த பிள்ளைகளாக வாழ்ந்து வளரவும் ஏனைய சகோதார இனத்தவர்களுடன் ஐக்கியமாகவும் சவிட்மாகவும் சமாதானமாகவும் வாழவும் வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கின்றேன்.
2019 ஏப்ரல் மாதம் எங்களுக்கொரு கசப்பான தினம். இத்தினத்தினால் பல்வேறு துன்பங்களையும் சவால்களையும் எதிர்நோக்கினோம். நாங்கள் இன்னும் சந்தேகங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அவற்றை நீக்குவதற்காக சியபம்பலகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலையில் மேடையில் இடம்பெறும் இந்த நிகழ்வு இன்றிலிருந்து அந்தக் கறையை இல்லாமற் செய்யும் என்று நான் நம்புகின்றேன்.
ஏப்ரல் மாதம் சிங்கள தமிழ் புதுவருடக் கொண்டாட்டம் இடம்பெற்றது. எமது புனித நோன்பு முடிவுற்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடினோம்.
கிறிஸ்தவ சகோதரர்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்;டித்தார்கள். ஆகவே இலங்கையில் சித்திரை மாதம் என்பது மிகவும் விசேட மாதமாக இருக்கிறது.; இலங்கையிலுள்ள பௌத்த சகோதரர்கள் புத்த பெருமானின் பிறந்த தினத்தை வெசாக் தினத்தை அனு~;டிக்க இருக்கிறார்கள். இத்தகைய தினங்களுக்கு தேசிய முக்கியத்துவம் வழங்க வேண்டும். நாட்டின் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசாங்கம் இந்த வாரத்தை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தி இருக்கின்றார்கள்.
இத்தினங்களில் மதுபான சாலைகள் இறைச்சிக் கடைகள், எல்லாம் பூட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கின்றது. நாங்கள் மதுபானம் அருந்தாதவர்கள். ஆனால் இறைச்சி சாப்பிடுகிறவர்கள். ஆகவே இலங்கை அரசாங்கத்தின் சட்ட திட்டங்களைக் கடைப்பிடித்து அவர்களுக்கு உதவும் முகமாக நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இதில் கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் எம். ஆர். எம். இர்சான், பௌத்த கிறிஸ்தவ சமயப் பெரியார்கள், ஜம்மிய்யதுல் உலமா சபை, பள்ளிவாசல் நிர்வாகிகள், பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர் மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.
இக்பால் அலி
05-05-2023








No comments:
Post a Comment