Recent Posts

Search This Blog

தன்னுடன் சண்டை பிடித்த கணவரை, கத்தியால் குத்தி கொன்ற மனைவி கைது #இலங்கை

Monday, 10 April 2023


புலஸ்திபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலஸ்திகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மனைவியொருவர் தனது கணவரை கத்தியால் குத்திக் கொலைசெய்துள்ளார்.



படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



உயிரிழந்தவர் புலஸ்திகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராவார்.



குடும்பத் தகராறு காரணமாக கணவரும் மனைவியும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும், இதன் போது மனைவி தனது கணவரின் மார்புப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



கொலையை செய்த சந்தேக நபரான பெண் காயமடைந்து புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



சம்பவம் தொடர்பான உண்மைகளை பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, சந்தேகநபர் ஏப்ரல் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



சந்தேகநபர் பொலன்னறுவை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புலஸ்திபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment