Recent Posts

Search This Blog

மாணவர்களுக்கு வழங்க பரிசிப் பொதிகளுடன் பள்ளிவாயலுக்கு வந்த மாற்று மத சகோதரர் - இன நல்லுறவுக்கு எடுத்துக்காட்டான ஒரு நிகழ்வு.

Monday, 10 April 2023


இன நல்லுறவுக்கு எடுத்துக்காட்டான ஒரு நிகழ்வு.

காங்கேயனோடை பெரிய பள்ளிவாயலில் ரமழான் கால இரவுநேர தொழுகையின் போது பாடசாலை மாணவர்களை பள்ளிவாயலோடு தொடர்பில் வைத்திருக்கவும் மேலும் இந்த விடுமுறை காலங்களில் அவர்களது கல்வியை ஊக்கப்படுத்தவும் மாணவர்களுக்கான
கேள்வி பதில் நிகழ்சிகளை தொடராக அந்த பள்ளிவாயல் நிர்வாகம் நாடத்தி வருகிறது.

முகநூல் எங்கிலும் பேசுபொருளாக
அனேகரின் வரவேற்பை பெற்றிருந்த இந்த நிகழ்வை அவதானித்து வந்த மட்டக்களப்பை சேர்ந்த மாற்று மத சகோதரர் ஜீவஹன் நேற்றைய தினம் பரிசில்களுடன் பள்ளிவாயலுக்குள் வந்து காத்திருந்த சம்பவம் அவ்வூர் மக்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது.

பள்ளிவாயல் தலைவர் ALM முஜாஹித் ( பல்கலைக்கழக விரிவுரையாளர்) அந்த சகோதரரை கண்ணியமாக வரவேற்று அந்த பரிசுகளை அவரது கரங்களினாலேயே மாணவர்களுக்கு வழங்கவும் வாய்ப்பளித்து அந்த சகோதரரையும் கெளரவபடுத்தி அவரது வரவால் தாங்கள் அனைவரும் சந்தோஷப்படுவதாக தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வழியனுப்பி வைத்திருந்தார்கள்.

மக்கள் ஒற்றுமை உணர்வு உள்ளவர்களாகவும் நாகரீகம் பண்பாடு வாய்ந்தவர்களாகவும் இருந்தால் போதும் நாட்டை மேலும் வளப்படுத்திவிடலாம்.




No comments:

Post a Comment