Recent Posts

Search This Blog

குரங்குகள் ஆய்வகங்களில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் : முன்னாள் வனவிலங்கு அமைச்சர்

Wednesday, 19 April 2023


சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய முன்னாள் அமைச்சர் நவின் திஸாநாயக்க, இந்த குரங்குகள் ஆய்வகங்களுக்குள் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.


“முன்னாள் வனவிலங்கு அமைச்சர் என்ற முறையில், குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நான் முற்றிலும் எதிரானவன். இது ஒரு அருவருப்பானது, அதை கருத்திற்க் கொள்ளக்கூடாது” என ட்வீட் செய்துள்ளார்.


இலங்கையின் விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் சட்டத்திற்கு எதிரானது என்பதாலும், இலங்கையில் பாதுகாக்கப்படும் இனங்கள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படக்கூடாது என்பதாலும் தான் இந்த நடவடிக்கைக்கு எதிரானதாகவும் அவர் குறிப்பிட்டார்.


“விலங்கியல் பூங்காக்களுக்கு இடையேயான பரிமாற்றத் திட்டங்களில் மாத்திரமே அவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும், மேலும் அவர்கள் ஆய்வகங்களுக்குள் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதற்கான ஒரு பாரிய வாய்ப்பு உள்ளது என்பதை நன்கு அறிந்திருப்பது மனிதாபிமானமற்றது” என்றார். “அவை அழகான விலங்குகள் மற்றும் அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் சுற்றித் திரிந்து முழுமையான வாழ்க்கையை வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளன.” என்றார்.



No comments:

Post a Comment